கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது.

இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும் இல்ல புனரமைப்பு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த நவம்பர் 27ஆம் திகதி கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டிருந்ததது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கரைச்சிப் பிரதேச சபை துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பொறுப்பேற்ற நிலையிலேயே இந்த பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.

Related Posts