கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாய்,முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வாய், முகம், தாடை விசேட வைத்திய நிபுணர் மா. தவராஜாவினால் மேற்படி சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts