கிளிநொச்சி மாவட்டத்தில் களஞ்சியசாலைக்கான கட்டிடதொகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான களஞ்சியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் ஆய்வு நிலையத்துடனான அலுவலகக்கட்டிக தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த கட்டடதொகுதியில் தங்குமிட வசதி நீர்த் தாங்கி ரானஸ்போமர் கூடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன . 33சதுர சுற்றளவைக் கொண்ட களஞ்சியசாலைக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான ஒப்பந்த குழுவின் சிபாரிசுக்கு அமைவாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Related Posts