இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக முற்பகல் 11 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நடைபெறும் இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழு ஆதரவையும் வழங்குகின்றது என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்திக் குறிப்பொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி