கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு.

கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி நகர்பகுதியிலுள்ள வீதி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராத காரணத்தினால் மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையினை செவிமடுத்த ஜனாதிபதி குறித்த பிரதேசசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆளுகையில் இருப்பதாகவும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது பொருத்தப்பட்ட இந்த வீதி விளக்குகளுக்கு பெருந்தொகையான நிதியினை குறித்த பிரதேச சபை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக வடமாகாண பிரதம செயலாளர் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபையினர் அக்கறையற்று இருக்கின்றார்கள் எனவே குறித்தபகுதியில் சூரியமின்கலத்திலான வீதி விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Posts