கிளிநொச்சி கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள்!

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூரடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரிற்கு சொந்தமான, கொழும்பு உணவகத்திலேயே இந்த நபரும் பணியாற்றினார். அந்த உணவகத்தில் பணியாற்றிய மேலும் 3 பேர் புங்குடுதீவு, வேலணை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட நபர்,

மயூரா ஹோட்டல், இல.46, கதிரேசன் வீதி, கொழும்பு 13 என்ற முகவரியிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஒக்ரோபர் 10ஆம் திகதி காலை 10.30 மணிக்கு கொழும்பு- வவுனியா இ.போ.ச பேருந்தில் பயணித்து வவுனியா வந்தடைந்தார்.

வவுனியாவிலிருந்து மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம்- வவுனியா தனியார் பேருந்தில் பயணித்து பரந்தனை வந்தடைந்தார்.

பரந்தனில் உள்ள பழக்கடைகளில் பழங்கள் வாங்கிக் கொண்டு, பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் தனியார் பேருந்தில் 6.15 க்கு ஏறி பயணித்து வீடு சென்றுள்ளார்.

அவர் பயணம் செய்ய பேருந்து இலக்கங்கள் இதுவரை அதிகாரிகளிற்கு கிட்டவில்லை. அவற்றை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Posts