கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும் பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு பொலிஸார் வந்ததாகவும் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.