கிளிநொச்சி அரச நிர்வாகத்திற்கு எதிராக இரணைதீவு மக்கள் நடவடிக்கை

கிளிநொச்சி – இரணைதீவில் கிராம மக்களது போரட்டம் தொடர்பில் அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைகுழுவிடம் முறை பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களோ அல்லது அரச அதிகாரிகளோ தங்களுடன் எந்தவொரு பேச்சு வார்த்தைக்கும் வரவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ள அம்மக்கள், தங்களுக்குரிய நிலங்கள் வழங்கப்படும்வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதுடன் அம்மக்களுக்கு தேவையான மருத்துவ பொருட்களையும் வழங்கிவைத்தனர்.

Related Posts