கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றது.
இந்த அமர்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1146 பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 705 பேர் சாட்சிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு 283 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வந்த இவ் அமர்வில் திங்களன்று கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 360 பேருக்கானஅழைப்பினை விடுத்த போதும் 178 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 69பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாயன்று கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 359 பேருக்கானஅழைப்பினை விடுத்த போதும் 221 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அத்தோடு 76பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
புதனன்று கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 240பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 179 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு 80 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 187 பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 127 பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு 58 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.