கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கடத்தல்!

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார்.

இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்த வேளையே கடத்தப் பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மோட்டார் ஊர்திகளில் வந்தவர்கள் அனைவரும் தம் முகங்களுக்கு துணி கட்டியிருந்ததால் அடையாளம் காணப்படவில்லை.

இவரின் குடும்பத்தினர் தர்மபுரம் காவல் நிலையம் சென்று முறையிட்ட போதும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இவை பற்றிய விபரங்கள் தெரிந்தால் தகவல் தருமாறும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 0775376875 செல்வி (தாயார்) 0776436034 கவிராஜ் (சகோதரன்)

Related Posts