கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுவரும் அம்மாச்சி உணவகம்!

கிளிநொச்சியில் 13.5 மில்லியன் ரூபாய் நிதியில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டு வருகின்றது.

விவசாய திணைக்களத்தினால் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில், கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த உணவகம், அமைக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் யாழ் பல்லைக்ககழகத்தின் இரு பிரிவுகள் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையம் என்பன இயங்கி வருவதுடன், தனியார் துறையின் கீழ் ஆயிரக்கணக்கானவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் இரு ஆடைத்தொழிற்சாலைகள் பழச்சாறு உற்பத்தி நிலையங்கள் என்பனவும் அமைந்துள்ளன.

இந்நிலையில் இப்பகுதியில் பாரம்பரிய உணவுவகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் வகையிலும் அறிவியல் நகரை அண்மித்த பகுதிகளில் வாழும் பெண் அதலைமைத்துவக் குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கும் வகையிலும் விவசாயத்திணைக்களத்தினால் அம்மாச்சி உணவகம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது,

Related Posts