கிளிநொச்சியில் 100 குடும்பங்களே மீள்குடியேறவேண்டும்

meelkudiகிளிநொச்சி மாவட்டத்தில் 100 குடும்பங்களே இன்னமும் மீளக்குடியேற வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 227 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர்.

இதனைத் தவிர, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 66 குடும்பங்களும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 13 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களுமாக மொத்தமாக 100 குடும்பங்கள் மீளக்குடியேற வேண்டியுள்ளது.

அதிலும் குறிப்பாக பச்சலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியிலும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் பரவிப்பாஞ்சான் பகுதியிலுமே அதிகளவான குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றதாகத் தெரிவித்தார்.

Related Posts