கடும்மழை காரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறையினூடாக உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் நேற்று புதன்கிழமை (17.10.2015) கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களைச் சந்தித்து உணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர்.
உழவனூர், பிரமந்தனாறு, புன்னைநீராவி, நாதன்குடியிருப்பு, தருமபுரம், கண்டாவளை, முரசுமோட்டை, ஆனைவிழுந்தான், பரந்தன், உமையாள்புரம், பொன்நகர் பகுதிகளில் இவ்வாறு உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறையால்அரிசி, மா, பருப்பு, சீனி, தேயிலை, பிஸ்கட் அடங்கியுள்ள உணவுப்பொதிகள் ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.