கிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தேராவில் வலைப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பூநகரி பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts