கிளிநொச்சியில் வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து குறித்த வீட்டின் மீது தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் அறிய முடிகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி அக்கரான் குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts