கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் சாவு!

கிளிநொச்சி, முரசுமோட்டை நான்காம் கட்டைப்பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவரை வாகனம் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. முரசு மோட்டையிலுள்ள சங்கரநாராயணன் கோயிலில் தங்கியிருந்த இயக்கச்சியைச் சேர்ந்தவரான த.பொன்னுத்துரை (வயது-65 )என்பவரே உயிரிழந்தவராவார்.

அதிகாலை வயலுக்குச் செல்வதற்காக வீதியில் சென்றவரை பின்னால் வந்த கப் ரக வாகனம் மோதிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.

உயிரிழந்தவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts