கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் கைது

கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Business crime

யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்த குறித்த நபர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு கட்டத்துவக்கு மற்றும் 150 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்த குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts