கிளிநொச்சியில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதால், மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் கிளிநொச்சியில் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள், காலநிலை நேற்று ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து வீடுகளுக்கு திருப்பினர். எனினும், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மழை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதனால், ஏற்கனவே வீடுதிரும்பியிருந்த மக்கள் மீண்டும் முகாம்களை நோக்கிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இரணைமடு குளத்தின் வான்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமையால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் நிறைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.