கிளிநொச்சியில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதி!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts