கிளிநொச்சியில் மது வெறியரின் அட்டகாசம்! பொலிசார் கட்டுப்படுத்தினர்!

கிளிநொச்சி 55ஆம் கட்டைக்கு ஏ9 பாதையில்   இன்று மாலை  ஒரு சிலர் குடித்துவிட்டு போதையில் வீதியால் போகிற வாகனங்களை மறித்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வசைபாடிய வண்ணம் இருந்துள்ளனர்.

ரிப்பர் வாகனம் ஒன்று வந்தபோது அதை மறித்து அதன் கண்ணாடியை உடைத்துள்ளார்கள். கர்த்தாலை ஒட்டி உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொலிசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்தனர். பொலிசாருக்கும் குடிகாரர்களுக்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கத்தில் குடிகாரன் எறிந்த போத்தல் ஒன்றை பொலிசார் ஒருவரை காயப்படுத்தியது.

இச்சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி வீதியில் ரயர்களைப் போட்டு சிலர் எரித்துள்ளனர். பொலிசாரின் தலையீட்டால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Posts