கிளிநொச்சியில் பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் 52 வயதான கட்டன் திக்கோயா பிரதேசத்தை சேர்ந்த பு.பாலசுபிரமணியம் எனத் தெரிய வருகின்றது

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்பாணத்திலிருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளாடு அருகில் இருந்த பாலத்தில் வாகனம் மோதியதில் வாகனமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது

வாகனத்தை ஓடிய பொலிஸ் சாரதி கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts