கிளிநொச்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி – குஞ்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணம் செய்த டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் பல தடவைகள் நிறுத்துமாறு கூறியதாகவும், எனினும் குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இதன்போது, சாரதிக்கு உதவியாக பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த டிப்பரில் வாகனத்தில் இருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts