கிளிநொச்சியில் புத்தாண்டியில் கொடூர கொலை!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இருவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.​

நேற்று (01) காலை வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் சுரேஷ் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

காயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள் இணைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தபோது, ​​இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

தாக்குதலை நடத்தியவர்களைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.​

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.​

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts