Ad Widget

கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய வழிபாட்டிடம் திறந்துவைப்பு!

கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய புதிய வழிபாட்டிடம் ஒன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சிப் படைகளுக்கான தலைமையகத் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேன திறந்துவைத்துள்ளார்.

kilinochchi-buddha-statue-4

அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலிருந்து கடந்த ஜனவரிமாதம் வெள்ளரசு மரக்கிளையொன்று கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி படைத் தலைமையத்தில் நடப்பட்டது.

அதனையடுத்து அந்த வெள்ளரசு மரத்துக்கான சுற்றுச்சுவருடன் கூடிய சமாதி நிலையில் இருக்கும் புத்தர் சிலையும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. இதனை இலங்கையின் 11ஆவது பொறியியல் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் கட்டிமுடித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இந்த புத்தர் சிலையுடன் கூடிய இடமானது பௌத்தர்களின் வழிபாட்டுக்காக்கத் திறந்துவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களிலிருந்து இலங்கையில் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் தொடர்ந்து புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Posts