கிளிநொச்சி கட்டை பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என் கவிந்திரன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அவர், கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிவதுடன், பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.