கிளிநொச்சி, பன்னங்கண்டி பாலத்தின் கீழிருந்து ஆணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வட்டக்கச்சி மாயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக பயணித்தவரே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதனடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டக்கச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.