கிளிநொச்சியில், பாதுகாப்புப் படையினரால் பொதுமக்களுக்கான உதவிகள் வழங்கும் நலத்திட்டத்தின் கீழ் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி நெலும் பியசவில் கேட்போர்கூடத்தில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேற்படி நிகழ்வினை கொழும்பு விஷன் கெயார் நிறுவனத்துடன் இணைந்து 65 ஆவது படைப்பிரிவு ஒழுங்கு படுத்தியிருந்தது.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பார்வைக் குறைபாடுடைய 200 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கான கண் பரிசோதனைகள் கடந்த மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் அஜித் காரியகாரன கலந்து கொண்டதுடன், மேஜர் ஜெனரல் பிமல் விதானகே, கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் 57 படைப்பிரிவின் அதிகாரியான திரு. கிருஷாந்த சொய்சா உட்பட விஷன் கெயார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.