Ad Widget

கிளிநொச்சியில் பல இடங்கள் வெள்ளக்காடு!

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் தொடக்கம் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதனால் மக்கள் வாழ்விடங்கள் பலவற்றுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளார்கள்.

kili-flood-160515

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி, சிவபுரம், பெரியபரந்தன், பொன்நகர், உருத்திரபுரம், அக்கராயன், ஆனைவிழுந்தான், மருதநகர், உமையாள்புரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம் பொக்கணை, முரசுமோட்டை, கோரக்கன்கட்டு, நாவற்கொட்டியான், தட்டுவன்கொட்டி, யூனியன்குளம், பூநகரியின் பல கிராமங்கள் என்பன நீர் தேங்கி வாழ்விடங்களுக்குள் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சிக்கும் உருத்திரபுரத்திற்குமான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ள அதேவேளை, மன்னார் வீதியில் மண்டைக்கல்லாறு பெருக்கெடுத்துள்ளமையால் மன்னார்-பூநகரி வீதிப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

Related Posts