கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.
இது தொடாபில் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில்
இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல் ஏழு நாட்களில், கிராஞ்சி சிவபுரம், மலையாளபுரம், அம்பாள்குளம், கணேசபுரம்,வலைப்பாடு, கல்மடு ஏழாம் யுனிற், செல்வாநகர் மற்றும் விசுவமடு ஆகிய இடங்களிலிருந்து எட்டுப்பேர் டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே உயிர்க்கொல்லி டெங்கு நோயிலிருந்து எமது அன்பிற்குரியவர்களையும் பாசத்திற்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக உடனடியாகக்களத்திலிறங்குங்கள்.
உங்களது உறவுகளுக்குக் காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால்உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் ஒருமுறைபரிசோதித்துக்கொள்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் அவர்களது உயிர்களைக்காப்பாற்றுங்கள்.
மாவட்டத்திலுள்ள கர்ப்பவதிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள்காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடவும்.
அத்துடன் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் புகையூட்டலை மேற்கொண்டு நோய் பரப்பும் நுளம்புகளைக்கொல்லுதல் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.
உங்களது வீடுகளில் அல்லது உறவினர் மற்றும் அயலவர் வீடுகளில் வசிக்கும் எவராவது டெங்குக் காய்ச்சல் காரணமாக எந்த ஒரு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றாலும், அவ்வாறு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அடுத்துவரும் 24மணிநேரத்தினுள் அவ்வீடுகள் மற்றும் சுற்றயலில் புகையூட்டல்மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வாறு புகையூட்டல் 24 மணிநேரத்தினுள் இடம்பெறவில்லை எனில் தயவுசெய்துபின்வரும் இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு புகையூட்டல் விரைவாக இடம்பெறுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்: 0770212765 எனவும் அறிவித்துள்ள சாகதார பிரிவினர்
நிரந்தரமாக உங்கள் அன்பிற்குரியவர்களது விலைமதிப்பற்ற உயிர்களைப்பாதுகாப்பதற்காக, டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை இனங்கண்டுமுற்றாக அழித்தொழியுங்கள். எனவும் தெரிவித்துள்ளனர். அத்தோடு உங்களுக்கு உதவுவதற்காகக் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின்பொதுச்சுகாதாரப் பிரிவினர், உங்கள் பகுதிப் பிரதேச சபையினர், பொதுமக்கள் அமைப்புகள் மற்றும் முப்படையினர் களத்திலிறங்கியுள்ளனர்.
வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் 10.01.2017 செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவர்களோடு இணைந்து டெங்கு நுளம்புகளைக் நிரந்தரமாகக் கிளிநொச்சி மண்ணிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அனைவரும் திரண்டு வாருங்கள்! வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அத்தோடு நோய் தொடர்பான அறிவித்தல்களையும் விடுத்துள்ளனர்
நோயாளர்களுக்கானஅறிவுறுத்தல்கள்
காய்ச்சல் காணப்படின்…
1.நோயாளிக்கு ஓய்வு வழங்கவும்
கஷ்டப்படவோ பாரமானவேலைகள் செய்யவோ இடமளிக்கவேண்டாம்
2.திரவவகைகளைபருககொடுக்கவும்
பால், பழச்சாறு, தோடம்பழச்சாறு, ஜீவனீ, இளநீர், சூப்போன்றன பொருத்தமானதாகும்.
தனியே நீரைமட்டும் அருந்தச்செய்ய வேண்டாம்.
சிவப்பு அல்லது கபில நிறபானவகைகளைக் குடிக்கச்செய்யவேண்டாம். உதாரணம் – சிவப்பு நிறகுளிர்பானம், கோப்பி , வழக்கமானதிண்ம உணவுகளை உட்கொள்ள முடியுமாயின் அவற்றை வழங்கவும்.
3.நோயாளி சிறுநீர்கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை பற்றி கவனத்திற் கொள்ளவும். நோயாளி சிறுநீர்கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை குறைவாயிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.
4.காய்ச்சல்காணப்படின் சாதாரண நீரினால் உடலை நனைக்கவும்
பெரசிட்டமோல் உரிய அளவு 6 மணித்தியாலத்திற்கொரு முறைவழங்கவும்.(பிள்ளைகளுக்காக உரிய அளவினை எடைக்கு ஏற்ப வழங்கவும்/ வயதுவந்தோருக்கு 1 கிராம்) காய்ச்சலுக்காக வழங்கப்படும் ஏனையமருந்து வகைகளை (விசேடமாக கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்துகள்) வழங்கவேண்டாம். உதா-: Diclofinac/ Ibuprofen/Mefenamic Acid – Tablets / Syrups
5.காய்ச்சல் 2 நாட்களுக்கமேலாககாணப்படின் மூன்றாவது தினத்தில் குருதிப் பரிசோதனையொன்றை மேற்கொள்ளவும்.
6.பின்வரும்அறிகுறிகள்காணப்படின்நோயாளியைஉடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்
திரவவகைகளைப்பருகமுடியாதிருத்தல் (அடிக்கடிவாந்தயெடுத்தல்)
உணவு, பானவகைகளை நிராகரித்தல் , கடுமையானதாகம்
நோயாளி சிறுநீர்கழிக்கும் தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர்வெளிவராமை)
கடுமையான வயிற்றுவலி , தூக்கநிலைமை , நடத்தையில் மாற்றம் ஏற்படல் , சிவப்பு , கறுப்பு, கபில நிறவாந்தியெடுத்தல், கறுப்பு நிறமலம் வெளியாதல் குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்துகுருதிப்பெருக்கு, சிறுநீர்சிவப்புநிறத்தில்வெளியாதல்)
தலைசுற்றுதல் கைகால்கள்குளிரடைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
மேலதிக விபரங்கள் மற்றும் உங்களது உதவிகளை நல்குவதற்கு பின்வரும்இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
0770424870 -மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர்- கரைச்சி
0778715724- மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர்- கண்டாவளை
0776748256- மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர்- பளை
0778715724- மேற்பார்வைச் சுகாதாரப் பரிசோதகர்- பூநகரி