கிளிநொச்சியில் சுகாதார தொண்டர்கள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியத்துறையின் கீழ் நீண்டகாலமாக சுகாதாரத் தொடண்டர்களாக சேவையாற்றிய தமக்கு நல்லாட்சி அரசாங்கமும், சுகாதார அமைச்சும் நிரந்தர நியமனத்தை தர வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

Related Posts