கிளிநொச்சியில் கோர விபத்து! : நால்வர் உயிரிழப்பு

கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்திற்கான காரணம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts