கிளிநொச்சியில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கரைச்சி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கண்டாவளை சுகாதாரப் பிரிவில் கண்ணகிபுரம், புன்னைநீராவி என்ற முகவரியைச் சேர்ந்த 67 வயதுடைய நல்லதம்பி சிவபாக்கியம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் D5, பெரிய பரந்தன் என்ற முகவரியைச் சேர்ந்த 46 வயதுடைய K.சிறீகாந்தன் என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts