கிளிநொச்சியில் குடும்ப பெண் கொலை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் நேற்று (புதன்கிழமை) பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்ப பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் (வயது 24) கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் இடம்பெறும்கொண்டாட்ட நிகழ்வொன்றிற்கு அயலவர்கள் சென்றுள்ளமையை நன்குணர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருக்க முடியும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை பார்க்க அவரது சகோதரி வந்த போது, அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு, அயலவர்களிடம் தெரிவித்ததன் பின்னர், பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

இதே வேளை குறித்த பெண் விவாகரத்து பெறுவதற்கு நீண்ட காலமாக போராடி வந்ததாகவும் இந்நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் குறிப்பிடுகின்றார்.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts