ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனே தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க வந்ததாகவும், அவ்விளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைஞன் தவறு செய்திருந்தாலும், இரும்புச் சங்கிலியால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்ததெனவும், இது பாரிய மனித உரிமை மீறல் எனவும் சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.