கிளிநொச்சியில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது.

அதனையடுத்து, நேற்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Related Posts