கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்ற ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் (வயது-33) என்பவரே கொலையுண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
கொலையுண்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அவரது மைத்துனரை அவர் அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.