கிளிநொச்சியில் இராணுவத்தினரால் காணி விடுவிப்பு!!

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் உள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதிக்கான காணியே இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொது காணிகள் மற்றும் மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி கலந்துகொண்டு காணியை கையளித்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன், 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்தன, மத்திய கல்லூரி முதல்வர், இராணுவ உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts