கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இலங்கை இராணுவம் பிரதான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக மர நடுகை மூலம் இலங்கையில் சௌபாக்கியமான நாடு என்ற திட்டத்தில் 66ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியின் அறிவுத்தலுக்கு அமைய குறித்த மரநாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலர், இலங்கை மின்சாரசபை, வன விலங்கு திணைக்கள அதிகாரிகள், பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த மர நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.