கிளிநொச்சியில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். நல்லூரில் நேற்றுமாலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இன்று கிளிநொச்சியிலும் போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக உறவுகளுக்கு தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts