கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.