Ad Widget

கிளாமருக்குத் தயாராகும் கீர்த்தி சுரேஷ்

‘ரஜினி முருகன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஒரு படத்திலேயே விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthy-suresh

இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளிவர வேண்டியுள்ள சூழ்நிலையில், தற்போது புதிதாக எந்தப் படங்களிலும் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறாராம்.

அதற்குக் காரணம் விஜய் படம்தான் என்கிறார்கள். விஜய் படம் நடித்து முடித்த பிறகு சம்பளத்தை உயர்த்தலாம் என்ற எண்ணம்தான் காரணம். தெலுங்கில் நடிக்கவும் பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், எதற்கும் பிடி கொடுக்காமல் பேசுகிறார் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

தெலுங்கிலிருந்து வரும் வாய்ப்புகள் அனைத்தும் கீர்த்தி சுரேஷை கிளாமராக நடிக்கக் கேட்டதால்தான் கீர்த்தி அவர்கள் வாய்ப்பை ஏற்கத் தயங்குகிறார் என்கிறார்கள்.

தெலுங்கில் வட இந்திய நடிகைகள் மிகவும் தாராளமாக நடிக்கும் போது அவர்களுக்குப் போட்டியாக நடிக்கும் தென்னிந்திய நடிகைகள் கிளாமர் காட்டத் தயங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும், நயன்தாராவிற்குப் போட்டியாக வரத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், இனி கிளாமர் பாதையில் செல்லலாமா என யோசிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சீக்கிரமே கீர்த்தி சுரேஷ் தெலுங்குப் படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என டோலிவுட் வட்டாரங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.

Related Posts