கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என ட்ரம்ப் யோசனை

கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்த லாட்டரி நியூயார்க்கில் ஒரு டிரக் தாக்குதல் சந்தேகநபருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குடிவரவு திட்டத்திற்கு பதிலாக ஒரு தகுதி அடிப்படையிலான முறைமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நிதிகளை குறைக்கும் டிரம்ப்பை ஏலவே குற்றஞ்சாட்டிய செனட்டர் சக் ஸ்குமர் மீதும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில், சய்புல்லோ சய்போவ் என்ற சந்தேகநபர் எவ்வாறு அமெரிக்காவுக்குள் குடியுரிமை பெற்று வந்தார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

Related Posts