கிறிஸ் கெயில் சாதனை

உலகக் கிண்ண தொடரில் இன்று இடம்பெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிய சாதனைகள் நிறைந்ததாக அமைந்துள்ளது.

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cup

கான்பரேவில் நடைபெறும் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 372 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டுவைன் சுமித் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்த பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் மாலன் சமுவேல் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 372 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்தனர்.

1999ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்காக இந்திய அணியின் சௌரவ் கங்கூலி மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து பெற்ற 318 என்ற இணைப்பாட்டமே சாதனையாக இருந்து வந்தது. ஆனால் கெயில் – சமுவல் ஜோடி அந்த சாதனையை முறியடித்து இரண்டாவது விக்கெட்டுக்காக 372 ஓட்டங்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

கிறிஸ் கெயில் 212 பந்துகளை சந்தித்து 10 பவுன்டரிகள் 16 சிக்சர்கள் அடங்களாக 215 ஓட்டங்களைப் பெற்றார். மாலன் சமுவல் 209 பந்துகளை சந்தித்து 11 பவுன்டரிகள் 3 சிக்சர்கள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டமாக கெயில் – சமுவல் பெற்ற 372 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் அவர்கள் தனது முதலாவது இரட்டைச் சதத்தினை தென்னாபிரிக்காவுக்கு ஏதிரா பெற்றமையும் இதே தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts