கிறிஸ்மஸ் தினத்தில் சூர்யா–ஜெயம்ரவி படங்கள் மோதல்

வருகிற 24–ந்தேதி 4 படங்கள் திரைக்கு வருகின்றன. ‘பசங்க–2’, ‘அஞ்சல’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ ஆகிய படங்கள் கடந்த மாதமே வெளி வர இருந்தவை. மழை மற்றும் பல்வேறு காரணங்களால் இவை திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது இந்த 3 படங்களும் 24–ந்தேதி திரையிடப்படுகின்றன. இதில் அஞ்சல படம் விமல் நடிப்பிலும், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் பிரவீன்குமார் நடிப்பிலும் உருவாகி இருக்கிறது. ‘பசங்க–2’ படத்தில் சூர்யா–அமலாபால் ஆகியோருடன் குழந்தைகள் பட்டாளம் நடித்திருக்கிறது.

‘தனி ஒருவன்’ படத்துக்கு பிறகு ஜெயம்ரவி–திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்‘ படமும் இதே நாளில் வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் சூர்யா–ஜெயரம் ரவி படங்கள் மோதுவதால் ரசிகர்களிடம் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Posts