Ad Widget

கிரேஸி மோகனுக்கு கமல் வாழ்த்து!

சினிமா நடிகர், நாடக நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், ஓவியர்… என பல்கலை வித்தகர் கிரேஸி மோகன். கமலின் அநேக காமெடி படங்களில் கிரேஸியின் பங்கு நிச்சயம் இருக்கும்.

kamal-kiraishi-mohan

உதாரணமாக அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராசன், தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்., என்று… பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

என்னதான் சினிமா வந்தாலும் தொடர்ந்து மேடை நாடகங்களை விடாமல் நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்தி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியவர்.

சுமார் 40 ஆண்டுகளாக அவர் மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கிரேஸி மோகனின் கலைச்சேவையை பாராட்டி அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாண கவர்னர் அவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார். இது கிரேஸி மோகனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

கிரேஸி மோகனுக்கு கிடைத்த இந்த கவுரவத்தையடுத்து நடிகர் கமல், கிரேஸிக்கு தன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‛‛திறமையான கலைஞர் கிரேஸி, நகைச்சுவை, ஓவியம் ஆகியவற்றுக்காக கிரேஸியை மேரிலாண்டு கவர்னர் கவுரவித்துள்ளார். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, வாழ்த்துக்கள், கிரேஸி” என்று கூறியுள்ளார்.

Related Posts