கிரிஸ் கெய்ல் புதிய சாதனை

பன்னிரெண்டு பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார்.

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் நேற்று மோதின.

இதில் மெல்போர்ன் அணிக்காக விளையாடிய கெய்ல், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டினார்.

இதன்மூலம் அதிகவேகமாக 12 பந்துகளில் அரைச்சதம் அடித்து கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய வீரர் யுவராஜ் சிங் பன்னிரெண்டு பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டியின் போது, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற சாதனையை கிறிஸ் கெய்ல் சமன் செய்துள்ளார்.

Related Posts