கிரிக்கெட் வீரரின் தந்தையின் கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பிலான, முக்கிய தகவலொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதாவது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவரது மார்பு பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கொலையாளிகளை கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சில குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மலானை பிரதேசத்தில் உள்ள தனஞ்சய டி சில்வாவின் வீட்டின் முன்முற்றத்தில் வைத்து, கடந்த 24ஆம் திகதி அவரின் தந்தை இனந்தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts