கிரிக்கெட் மைதானத்தில் மேலும் ஒரு மரணம்

இஸ்ரேலில் கிரிக்கெட் மைதானத்தில் அம்பயர் ஒருவர் மரணமடைந்தது குறித்து அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் லிமர் லிவ்நட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அஷ்டாட் என்ற நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், ஹிலில் ஆஸ்கர் என்ற அம்பயரின் கழுத்தில் பந்தடி பட்டபின் அவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஆஸ்கர், மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டும் மருத்துவர்களால் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

கடந்த வாரம் பவுன்சர் பந்தில் அடிபட்ட உயிரிழந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த போட்டி ஆரம்பித்துள்ளது.

ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்ததாக உயிரிழந்த அம்பயரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் கிரிக்கெட் பெரிய அளவு விளையாடப்படுவதில்லை.

இந்தியாவில் இருந்து குடியேறிய யூதர்கள் அதிகம் வசிக்கும் அஷ்டாட் நகரில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது.

Related Posts