கிரிக்கெட் தேர்தலில் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் அர்ஜூன முறைப்பாடு

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின் போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஒரு பக்கத்திற்கு அதிக பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும், எனினும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அர்ஜூன ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இது குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாட்டை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts