கிரிக்கட் போட்டி நடுவர் காலமானார்

sellaiya-ponnuththuraiஇலங்கை அணி 1985 ஆம் ஆண்டு தமது முதலாவது டெஸ்ட் கிரிக்கட் வெற்றியை பெற்ற போட்டியில் விளையாடியிருந்தவரும் இலங்கையச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவருமான செல்லையா பொன்னுதுரை நேற்றைய தினம் காலமானார்.

காலமாகும் போது அவருக்கு 78 வயது.

யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான செல்லையா பொன்னுதுரை வலதுமுறை மித வேகபந்து வீச்சாளராகவும் இருந்தார்.

அவர் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் வரையான காலப்பகுதியில் இந்தியா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

Related Posts